சைக்கிள் மட்டுமே
ஓட்டத் தெரிந்த
மழைக்கும் பள்ளிக்கு
ஒதுங்காத
தூரத்து சொந்தமான
அண்ணன் ஒருவன்
கம்ப்யூட்டர்
சொல்லித்தரியா?
என கேட்கையில்
அதிகம் அறிந்து
வைப்பதில் தான்
ஆரம்பிக்கிறது
சந்தோஷத்தின் முடிவென்று
எப்படி புரிய வைப்பேன்.....
அறியாமை கூட
அறிவுதான்
அனைத்தும்
அறிந்தவனாய்
எல்லோரையும்
எச்சரிக்கையுடன்
ஏறிடும் என்
அறிவைக்காட்டிலும்...
.
அவன்
ஆசீர்வதிக்கப்பட்டவன்...
வயதான பின்பும்
குழந்தையாய் வாழ...
அவன் வெள்ளந்தியாகவே
இருந்துவிடட்டும்...
என்னால் தான்
முடியவில்லை!!!
சை.மஹபூப்ஜான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக