ஒரு பைத்தியம் என்ன செய்யும்,தனக்குத் தானே
பேசும்,சிரிக்கும்,அழும்.அது பைத்தியம் என்பதால் நாம் அதை கண்டுகொள்வதில்லை..பைத்தியங்களும்
நம்மை கண்டுகொள்வதில்லை.அப்படிப்பட்ட ஒரு மனநிலைதான் பேஸ்புக் பாவிக்கும் பலரின்
தற்கால மனநிலையும்!
எதை எழுதுகிறோம் என்பதில்
அவர்களுக்கும் பொறுப்பில்லை.எதை ரசிக்கிறோம் என்பதில் ரசிப்பவர்களுக்கும்
ரசனையில்லை.போகிறபோக்கில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு போகிறார்கள்.தனிமையில்
நினைக்கும் அந்தரங்கங்களை கூட பொதுவாக பகிர்வதில் உள்ள உள சிக்கல்தான் நம்மை
வேறொரு கேடுகெட்ட உலகிற்கு இட்டுச் செல்லும்!
பிரபலம் எனும் போர்வை
ஒருசில ஆயிரம் பேர்களால் போர்த்தப்பட்டதும்,அதில் ஒளிந்து கொண்டு இவ்வுலகை
இரட்சிக்க வந்தவர்களாய் இவர்கள் எழுதும் ஆபாசங்களுக்கு அளவே இல்லை!
எப்பா! பேஸ்புக்
இலக்கியவாதிகளே பைத்தியக்காரனாய் இருங்கள்..அது உங்கள் சொந்த உரிமை.ஆனால் பொது
இடங்களில் புகையிலையை மென்று எச்சில் துப்பிச் செல்வதைபோன்று ஆபாசங்களை எழுதும் எழுத்து ஜாலத்தை காட்ட
சமூக வலைத்தளங்களை நாடாதீர்கள்.!அதில்தான் உங்களுக்கு விருப்பம் என்றால் யாராலும்
எங்களை காப்பாற்ற முடியாது!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக