TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் UNIQUE ID என்று சொல்லப்படும் நிரந்தர பதிவெண்ணை வைத்திருப்பார்கள்.இது 5 வருடங்களுக்கு செல்லுபடியாகும்.சில நேரங்களில் நம் கவனக்குறைவால் பதிவு எண் அல்லது கடவுச்சொல் அல்லது இரண்டையும் மறந்திருப்போம் அல்லது தொலைதிருப்போம்.மீண்டும் நம் பதிவெண் மற்றும் கடவுச்சொல்லை பெற விரும்பினால் நீங்கள் admin@tnpscexams.net என்ற முகவரிக்கு நீங்கள்
முன்பே எந்த மின்னஞ்சல் முகவரியை TNPSC இல் பதிவு செய்திருந்தீர்களோ
அதிலிருந்து ஒரு கோரிக்கை செய்தியை அனுப்பினால் போதும்.
இரண்டொரு நாளில் தங்கள் பதிவெண் மற்றும் கடவுச்சொல் குறித்த தகவல்கள்
ஒரு பைத்தியம் என்ன செய்யும்,தனக்குத் தானே
பேசும்,சிரிக்கும்,அழும்.அது பைத்தியம் என்பதால் நாம் அதை கண்டுகொள்வதில்லை..பைத்தியங்களும்
நம்மை கண்டுகொள்வதில்லை.அப்படிப்பட்ட ஒரு மனநிலைதான் பேஸ்புக் பாவிக்கும் பலரின்
தற்கால மனநிலையும்!
எதை எழுதுகிறோம் என்பதில்
அவர்களுக்கும் பொறுப்பில்லை.எதை ரசிக்கிறோம் என்பதில் ரசிப்பவர்களுக்கும்
ரசனையில்லை.போகிறபோக்கில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு போகிறார்கள்.தனிமையில்
நினைக்கும் அந்தரங்கங்களை கூட பொதுவாக பகிர்வதில் உள்ள உள சிக்கல்தான் நம்மை
வேறொரு கேடுகெட்ட உலகிற்கு இட்டுச் செல்லும்!
பிரபலம் எனும் போர்வை
ஒருசில ஆயிரம் பேர்களால் போர்த்தப்பட்டதும்,அதில் ஒளிந்து கொண்டு இவ்வுலகை
இரட்சிக்க வந்தவர்களாய் இவர்கள் எழுதும் ஆபாசங்களுக்கு அளவே இல்லை!
எப்பா! பேஸ்புக்
இலக்கியவாதிகளே பைத்தியக்காரனாய் இருங்கள்..அது உங்கள் சொந்த உரிமை.ஆனால் பொது
இடங்களில் புகையிலையை மென்று எச்சில் துப்பிச் செல்வதைபோன்று ஆபாசங்களை எழுதும் எழுத்து ஜாலத்தை காட்ட
சமூக வலைத்தளங்களை நாடாதீர்கள்.!அதில்தான் உங்களுக்கு விருப்பம் என்றால் யாராலும்
எங்களை காப்பாற்ற முடியாது!!!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும்,அடையாள அட்டை இருப்பவர்கள் தங்கள் பெயர் பட்டியல் இருக்கிறதா என சரிபார்க்க வேண்டிய நேரம் இது.கீழே உள்ள நிரலில் சென்று உங்கள் பெயர் உங்கள் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளுங்கள்
உடற்பயிற்சி என்றால் சிலருக்கு அலாதி
பிரியம்.அதிலும் உடல் எடையை குறைக்கவும்,கட்டுக்குள் வைக்கவும்
அரும்பாடுபடுவார்கள்.உடல் எடை குறைக்க உதவும் உடற்பயிற்சிகளில்
ஏரோபிக்ஸ்,யோகா,ரன்னிங்,வாக்கிங் போன்றவை முக்கியமான உடற்பயிற்சிகள்.உடல் எடை
மேலாண்மையில் இவை முக்கியமான பங்கு வகிக்கின்றன.மேற்சொன்ன அனைத்தும் உடல் எடையை
குறைக்க பயன்பட்டாலும்,ஒவ்வொருவருக்கும் “”BODY SHAPE” என்று சொல்லக்கூடிய அழகிய
உடற்கட்டு மிக முக்கியம்..அழகான உடற்கட்டு ஒவ்வொருக்கும் ஒரு
புத்துணர்வையும்,தன்னம்பிக்கையையும் தரும் என்பதில் ஐயமில்லை.அதற்கு ஜிம் வகை
உடற்பயிற்சிகள் தான் ஒரே வழி..எல்லோராலும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்யும்
அளவுக்கு நேரமோ,சூழலோ அமைவதில்லை..ஜிம் என்றால் ஆஜானுபாகுவான மனிதர்கள் மட்டும்
செய்தால் போதும் நமக்கெதற்கு என்று விலகி வேடிக்கை பார்பவர்களும் உண்டு.ஆரம்பத்தில்
கடினமாக இருந்தாலும்,சிறிய உடல் வலி இருந்தாலும் ,நாட்கள் செல்ல செல்ல ஜிம் வகை
பயிற்சிகளால் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் உங்களை வேறொரு உலகிற்குஅழைத்து சென்று புதுமையாக உணர வைக்கும்.
வாரம்
முழுக்க ஜிம்மில் பலியாக கிடந்தது WORKOUT செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை..வாரத்தில்
மூன்று நாட்கள் அதுவே அதிகம்.முழுமையான அர்பணிப்புடன் செய்யும் போது மூன்று
நாட்களே போதும்..சிறப்பான,தகுதிவாய்ந்த வாய்ந்த மேற்பார்வையாளரின் ஆலோசனையின் படி,அவரவர் உடல் வலுவுக்கேற்ப எடை
கொண்டு மிதமாக தொடந்து செய்து வந்தால் கை மேல் பலன் நிச்சயம்.
சரியான மேற்பார்வையாளரோ,உடற்பயிற்சியாளரோ
இல்லாத நிலையில் நீங்கள் உதவிக்கு கூகிள் ஆண்டவரை நாடலாம்..ஆம் YOUTUBE இல் MIKE
CHANG WORKOUTS என்று தேடி பாருங்கள்.நான் பார்த்தவரையில் எளிமையான,தெளிவான
உடற்பயிற்சிகளால் அசரடிக்கிறார் மனிதர்.உடற்பயிற்சி குறித்த தெளிவான IDEA
உங்களுக்கு கிடைக்கும்.வாழ்த்துக்கள் !
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் முடிவு எப்படி இருக்கும் என்பதை முன்னரே கணிக்கும் வகையில் விகடன் நடத்தும் இந்த இணைய சர்வேயில் கலந்து தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யவும்....
link:http://www.vikatan.com/new/special/survey/jv_survey.php